Friday 21 March 2014



அசைவ உணவு உண்பவர்களுக்கு புற்றுநோயால் இறக்கும் ஆபத்து அதிகம் என அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் 50 வயதிற்கு மேற்பட்ட, 6,318 பேர்களிடம் இதுகுறித்து ஆய்வு நடத்தினர்.

அவர்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், அசைவ உணவுகள் மற்றும் சீஸ் உணவு வகைகளால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பலர் மரணத்தின் விளிம்பில் உள்ளனர்.

நடுத்தர வயதில் உள்ளவர்கள் அதிகளவு புரதம் உள்ள உணவுகளான, இறைச்சி, பால் மற்றும் சீஸ் போன்ற உணவுகளை உட்கொள்பவர்களின் உடல் நலம் விரைவில் பாதிக்கப்படுகிறது.

 புற்றுநோய் குறைவான புரதச் சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொண்டால், புற்றுநோய் தாக்கும் அபாயம் குறைவு.தாவர உணவுகளில் இருந்து கிடைக்கும் புரதச் சத்துக்கள், மாமிச புரதத்தைப் போன்று அபாயகரமானவை அல்ல, கார்போஹைடிரேட் அல்லது கொழுப்பு குறைவான உணவுகள், புற்றுநோய் விகிதத்தை குறைக்கின்றன.

நடுத்தர மற்றும் குறைவான புரதத்தை எடுத்துக்கொள்வதன் மூலம், இறப்பு விகிதத்தை 21 சதவீதத்திற்கு குறைக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

0 comments:

Post a Comment

Blog Archive