Sunday 23 March 2014



அஜீரணப் பிரச்சினை என்பது இன்று அதிகமான பேரை அவதிக்குள்ளாக்குகிறது. உண்ணும் உணவு ஒழுங்காக செரிக்காவிட்டால் உடல்நலத்துக்குப் பாதிப்பு ஏற்படும். வயிற்று வலி, புளித்த ஏப்பம் போன்றவை ஏற்பட்டு சிரமத்தைத் தரும்.

எனவே வயிறு சுத்தம் என்பது அவசியம். அப்போது தான் செரிமான மண்டலத்தின் இயக்கம் சிறப்பாக இருக்கும். பச்சைக் காய்கறிகள் வயிற்றைச் சுத்தமாக்கும். கீரைகள், செலரி, புராக்கோலி, பீன்ஸ் போன்ற உணவுகள் எளிதில் ஜீரணமாகும்.

அதேபோல கேரட், வெங் காயம், பச்சைப் பட்டாணி, உருளைக்கிழங்கு போன்ற உயர்தர கார்போஹைட்ரேட் உணவுகள் வயிற்றுக்கு ஏற்றவை. புளிப்புச் சுவையுள்ள சிட்ரஸ் பழங்கள், செரிமான மண்டலத்தை நல்ல நிலையில் வைக்கும். பழங்களில் உள்ள நார்ச்சத்து வயிற்றுக்கு ஏற்றது.

எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி போன்றவை செரிமான மண்டலத்துக்கு ஏற்ற உணவுகள். அதே போல் தினசரி இரண்டு வாழைப்பழம் சாப்பிடுவது மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். தானிய உணவுகள், கோதுமை ரொட்டி போன்றவை எளிதில் ஜீரணமாகும்.

தேவையற்ற கழிவுகள் வெளியேற உதவும். அதே போல, தினசரி உண்ணும் உணவுகள் எளிதில் செரிப்பதற்கு நிறைய தண்ணீர் பருக வேண்டும். பால், பழரசங்களையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மூலம் செரிமான மண்டல கோளாறுகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

சத்தான உணவு சாப்பிடுவதன் மூலம் உடம்பில் தேவையற்ற கொழுப்பு சேர்வது தடுக்கப்படும். தொப்பை ஏற்படாது. வயிறு தட்டையாக இருக்கும். வாயில் வைக்கும் உணவில் நாம் கவனமாக இருந்தால், வயிற்றில் பிரச்சினை ஏற்படாது! 

0 comments:

Post a Comment

Blog Archive