Friday 21 March 2014



*டென்ஷனில் இருந்து விடுதலை பெற என்ன சாப்பிடலாம் என்று சொல்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.

 சிறு வயது முதல் உணவில் கவனம் செலுத்தாமல் விடுவது, தவறான உணவு முறை இவை இரண்டும் டென்ஷனுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

*சத்தான உணவுகளைத் தவிர்த்து அதிக கொழுப்பு, பல்வேறு ரசாயனங்கள் உள்ள பாஸ்ட் புட் வகைகளை உட்கொள்வதால் சோர்வு, நினைவாற்றல் குறைவு, படபடப்பு, உடல் எடை கூடுவது மற்றும் ரத்த கொதிப்பு, இளம்வயதில் ஹார்ட் அட்டாக் என பல நோய்களின் கூடாரமாக உடல் மாறுகிறது.

*உடலில் பிரச்னைகள் இருக்கும் போது அது மனதையும் பாதித்து ஹார்மோன்களையும் பாதிக்க செய்கிறது. இதனால் டென்ஷன் அதிகரித்து மன அழுத்தத்தில் கொண்டுபோய் விடுகிறது.

 சிறு வயது முதல் சத்தான கீரை, காய்கறிகள், பழங்கள் சாப்பிடும் பழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும். நமது பாரம்பரிய உணவுகளுக்கு முதலிடம் தர வேண்டும்.

 ஆவியில் வேக வைத்த உணவுகள் மற்றும் பருப்பு வகைகள், தானியங்கள் அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

*பச்சைப்பயறு, கொள்ளு, கொண்டைக்கடலை மற்றும் பீன்ஸ் உள்ளிட்ட பயறு வகைகளை கலவையாக முளைக் கட்டி சாலடாக சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான புரோட்டீன் கிடைக்கிறது.

 சத்தான உணவுகள் உடலையும், மனதையும் உற்சாகமாக வைத்திருக்கும். குளிர்பான வகைகளை தொடர்ந்து குடிப்பதற்கு தடா போடவும்.

*பர்கர், பீசா மற்றும் ஜங்க் புட் வகைகளை தவிர்க்கவும். இட்லி, கம்பு, ராகிக் களி, சோள மாவு தோசை, கீரை கலந்து செய்யப்படும் அடை வகைகள் என மூன்று வேளை உணவிலும் பாரம்பரிய உணவுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.

0 comments:

Post a Comment

Blog Archive