Friday 21 March 2014

சந்தனம்


நறுமணம் வீசும் சந்தனம் ,காலம்காலமாக , இறைவனுக்குரிய பூஜை பொருளாக இருந்து வருகிறது.

இயற்கையிலேயே மணம் வீசுவது மட்டுமன்றி ,உடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது சந்தனம் .சந்தனத்தை மைபோல் அரைத்து இறைவனுக்கு சாற்றிய பின்னர்தான் மற்ற காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டும்.

 சந்தனத்தை அரைத்து இறைவனுக்கு இடுவதால் மலையளவு புண்ணியம் தேடி வரும்.சந்தனத்தை நெற்றியிலும்,உடலெங்கும்
பூசிகொள்வதால் எண்ணிய நற்காரியங்கள் நிறைவேறும்.

சந்தனம் குளிர்ச்சியானது என்பதால் நெற்றியிலிடும்போது , இரு நெற்றிப் பொட்டுகளுக்கிடையே உஷ்ணத்தை குறைத்து, மூளையின் செயல்பாடுகளை தூண்டுவதோடு , துர்சக்திகள் நம்மீது படாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது.

சந்தனத் திலகமிடுதல் உடல் நலம் பெறுவதோடு, மூளையை குளுமையாக்கி மனதை தெய்வீக நினைவில் செலுத்தும்.அதன் நறுமணம் நம் மனதை இறை நினைவில் முழுவதுமாக நிறுத்த உதவுகிறது.

இயல்பாகவே மணம் நிறைந்தது சந்தனம்.சந்தனத்தை வழங்கிய இறைவனுக்கு அதையே அர்பணிப்பதன் மூலம்,எல்லாம் அவன் செயல் ,நமக்குரியது ஒன்றுமில்லை என்கிற இயற்கை தத்துவத்தை உணர்கிறோம்.

சந்தன மரங்களில் பலவகைகள் உண்டு.சித்தர்கள் ,மக்கள் நலம் கருதி ஆங்காங்கே நடுகின்ற சந்தனமரங்கள் அற்புத சக்தி கொண்டவை.பொதிகமலையில் இவற்றை அதிக அளவில் காணலாம்.

மலைப் பகுதியில் நெடிஉயர்ந்து வளர்ந்து ,விளைச்சல் முற்றி உறுதிபெற்று காணப்படுவது மலைச் சந்தனம் ஆகும். சமவெளிப் பகுதியில் வளர்வது நடுசந்தனம் .

பெரும் மழையாலும்,புயலாலும் இடம் பெயரும் சந்தனச் செடிகள் ஆங்காங்கே நிலை கொண்டு வளர்வது புயல் சந்தனமாகும்.

சப்தரிஷியினர் சந்தன மரங்களில் வாசம் செய்வதாக கூறபடுகிறது.

பொதுவாக சந்தன மரங்கள் 80 ஆண்டுகளுக்கு மேல் தான் முதிர்ச்சி பெறுகிறது .அதற்குள் பல பருவநிலைகளை கடந்து, ஒவ்வொரு நிலையிலும் வித விதமான அருள் சக்தியை பெறுகிறது.

 ரிஷி பால பருவம்,மணப்பருவம், புருஷப்பருவம், நடுப்பருவம் என்று பல வித பருவங்களை கொண்டது சந்தன மரம்.

சந்தன மரங்களை வெட்டுவதற்கு முன்பாக காப்புக்கட்டி , கலாகர்ஷணம் செய்து,சப்தரிஷிகளுக்கு பூஜை செய்து அவர்கள் அனுமதி பெற்ற பின்னரே வெட்ட வேண்டும்.

இளையாப்பு சந்தனம் என்பது சந்தன மரத்தை முதன் முதலில் வெட்டிய பின் அதில் கிடைக்கும் முதற்கட்டைகளை கொண்டு சந்தனம் அரைத்து  குழம்பாக்கி, எல்லை தெய்வத்திற்கு இடுவது.

சந்தன கட்டைகளை ஹோமங்களில் இட்டால் சப்தரிஷிகள் மிக மகிழ்ந்து அளவில்லா திருவருளை அருள்வார்கள். சந்தனமரத்தில் கணுமரம், குருத்தானம், மறைகுழம்பு சந்தனம், கனகப் பட்டை என பல பிரிவுகள் உண்டு.

இயற்கையிலேயே மணம் வீசும் தன்மை கொண்ட சந்தனத்தை கொண்டு ஆண்டவனை பூஜிபவர்களின் வாழ்க்கையிலும் சுகந்தம் வீசும்.

சந்தன மரத்தில் சப்த ரிஷிகள் வாழ்வதால் சந்தனம் அரைக்கும் போது அத்ரி,பிருகு, குத்ஸர் ,வசிஷ்டர் ,கௌதமர்,காஸ்யபர் , ஆங்கிரஸர் என்ற ஏழு ரிஷிகளின் நாமங்களை ஜபித்து அவர்கள் ஆசி வேண்டி சந்தனம் அரைத்திடல் வேண்டும்.

0 comments:

Post a Comment

Blog Archive