Wednesday, 19 March 2014



நடைமுறையில் இன்றைய பெண்கள் பேஷனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மேலும் தங்களுக்கு ஏற்ற உடை, ஆபரணம், மற்றும் கலர் தெரிந்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக உள்ளார்கள். அவர்களுக்காக இதே சில டிப்ஸ்...

* உயரமாகவும், ஒல்லியாகவும் உள்ள பெண்கள் குறுக்கே கோடுகள் போட்ட உடைகளையோ அல்லது பெரிய டிசன்கள் உள்ள உடைகளையோ அல்லது பெரிய பார்டர்கள் போட்ட உடைகளை அணிந்ததால் பார்க்க அழகாக இருக்கும்.

* குண்டாக உள்ள பெண்கள் சிறிய டிசன்கள் உள்ள உடைகளையும், சிறிய கோடுகள் போட்ட உடைகளையும், அகலம் குறைவாக உள்ள பார்டர்கள் போட்ட உடைகள் அணிவது அழகாகவும், ஒல்லியாகவும் தெரியும்.

* சிவப்பாக இருக்கும் பெண்களுக்கு டார்க் கலரும், கருப்பாக இருக்கும் பெண்களுக்கு லைட் கலரும் பொருத்தமாக இருக்கும் என்ற பொதுவான கருத்து உள்ளது. ஆனால் அது மிகவும் தவறு. கருப்பாக இருக்கும் பெண்கள் லைட் கலர் உடை அணிந்தால், அவர்கள் மேலும் கருப்பாகத் தெரிவார்கள்.

ஆனால் சிவப்பாக இருக்கும் பெண்கள் லைட் கலர் அணிந்தால் மேலும் அழகாகத் தெரிவார்கள்.

கருப்பான பெண்களுக்கு ஓவர் லைட்டாகவும் இல்லாமல், ஓவர் டார்க்காவும் இல்லாமல் இருக்கும் மீடியமான கலர்கள் தான் மிகவும் சிறந்தது.

உதாரணமாக கருப்பான பெண்கள் புளூ கலர் உடைகளை அணிந்தால் பார்க்க மிகவும் அழகாகவும், கலராகவும் தெரிவார்கள். 

0 comments:

Post a Comment

Blog Archive